NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** மீலாது விழா பேரணி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற்றது

மீலாது விழா பேரணி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற்றது

 மீலாது விழா பேரணி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற்றது.தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சியில் மீலாது விழா பேரணி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் எம் ஐ இ டி சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது..


 இந்த கூட்டத்தில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் ராஜா முகமது வரவேற்புரை ஆற்றினார்.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிறுவனர் தலைவர் தர்காக்கள் பேரவையின் அல்தாப் உசேன் சாஹிப் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


இதனைத் தொடர்ந்து மாநில பொருளாளர் நத்தர்வலி பாதுஷா தர்கா தலைமை அறங்காவலர் அல்லா பக்ஷ் என்கிற முகமது கௌஸ்,மாநில மக்கள் தொடர்பாளர் இப்ராஹிம்,மாநில அமைப்பு செயலாளர் கலந்தர் பஷீர்.மாநில முதன்மைச் செயலாளர் ஜுபைருதீன்,மாநில பொதுச் செயலாளர் லியாகத் அலி,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக வக்பு திருத்தச் சட்டம் 2024 எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல நாடாளுமன்ற கூட்ட குழு ஆலோசனைக்கு அது அளிக்கப்பட்டிருந்தாலும் அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வேண்டுகோளாகும்.


எனவே இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு அதனை திரும்ப பெற வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


வக்பு திருத்தச் சட்டத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வரும் காங்கிரஸ், திமுக ,கம்யூனிஸ்ட் க இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்,உள்ளிட்ட கட்சிகளுக்கும் தற்போது அதனை எதிர்க்க முடிவு எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆகியோருக்கும் தங்கள் கட்சியின் எதிர்ப்பில் உறுதுணையாக நிலைபாட்டை முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்திடம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம்  நன்றியை தெரிவிக்கிறது.


தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக அப்ஸலுல் உலமா எம். அப்துல் ரஹ்மான், பொறுப்பேற்று கடந்த மூன்று வருடங்களாக மிக சிறப்பாக பணி செய்து வருகிறார்.வக்பு நலனுக்காக துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டது,


வரை பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறார்.இவரது நடவடிக்கைகளால் வக்பு சொத்துக்களில் ஆதாயம் அடைந்து ப வந்தோர் தங்களின் ஆதாயம் பாதிக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்தனர், விரல் விட்டு என்னும் இந்த சிலர் சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்ப அப்துல் ரகுமான் அவர்கள் தனது பதவியை விலகலை அறிவித்துள்ளார், 

எனவே தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரும் ஆளுமையில் ஒருவராகிய இவரது பதவி விலகல் சமுதாயத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 

எனவே தேசத்திற்கு முன்மாதிரியான திமுக ஆட்சி நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் இவரின் பதவி விலகலை ஏற்காமல் தமிழ்நாடு வக்புவாரிய தலைவர் பதவியில் அவரை தொடர செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அவதரித்த அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்தநாள் வருவதையொட்டி ஒவ்வொரு மஹல்லாவிலும் சுன்னத் வல் ஜமாத் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் தமிழக தர்காக்கள் பேரவையின் மீலாது விழாக்களை சிறப்பாக நடத்திட இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இதில் மாவட்ட பேரவைச் செயலாளர் அப்துல் ரஜாக்,மாவட்டத் துணைத் தலைவர் சர்தார்,ஆட்டோ அன்சாரி மாவட்டத் துணைச் செயலாளர் ஜானி பாஷா .மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ஆட்டோ பாஷா .மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான்,திருச்சி மாநகர செயலாளர் வரகனேரி பள்ளி இமாம் ரப்பானி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்ட முதன்மை செயலாளர் ராஜா முகமது நன்றி கூறினார்

Post a Comment

0 Comments