// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்‌

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்‌

 திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்‌ நடைபெற்றது.


அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை நெருப்பால் அடித்தும் தீ வைத்து எரித்து திருச்சி மாநகர் மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ரத்தினவேல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், 




மாவட்ட துணை செயலாளர் வனிதா,14 வது மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்,மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments