திமுக நடத்துகின்ற போராட்டங்கள் மூலம் மத்திய அரசுதான் இந்தியாவின் பேரரசு என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றால் அதனை துறைவாரியாக சொல்லுங்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்வது தமிழக முதலமைச்சருக்கு அழகு அல்ல.தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். சேலம், திருச்சி, மதுரை என தலைநகராக பிரித்தால் அப்போது நிதி கேட்டு பெற்று கொள்ளலாம். அப்போது நாங்கள் 3 மாநிலத்திற்கு 45ஆயிரம் கோடி வழங்க முடியும் மத்திய அரசிடம் கேட்டு வாங்கித் தர நாங்கள் தயார்..பாஜக மாநிலத் துணைத் தலைவர் திரு கே.பி ராமலிங்கம் திருச்சியில் பேட்டி
திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் கூறுகையில்..
மக்கள் விரோத அரசாக திமுக செயல்பட்டு வருகிறது.
மக்கள் மாற்றங்களை விரும்புகின்ற நேரங்களில் அரசு செய்கின்ற தவறான செயல்களை திசை திருப்பதற்காக புதிய புதிய வடிவங்களை உருவாக்குவதில் திமுக அரசுக்கு கைவந்தகலை..
அப்படி கடந்த 10 நாட்களாக திமுக அரசு தமிழகத்தில் செய்து வருகிறது.மத்திய நிதிநிலை அறிக்கைகள் தமிழகத்தில் எதுமே இல்லை தமிழகம் புறக்கணிக்கப்பட்ட விட்டது அதற்காக மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்த பத்திரிகை மற்றும் ஊடகங்களை மத்திய அரசை ஒன்றிய அரசு சொல்ல வைக்கிறார்கள்
மாநில அரசு சர்வ அதிகாரம் போன்றும் மத்திய அரசு ஒன்றுக்கும் உதவாத அரசு போன்று சொல்லிக்கொண்டு இருந்தீர்களே ஒவ்வொரு மாவட்டமாக சென்று மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை, கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்களே அப்போது ஒத்துக்கிறீர்களா மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசுதான் நிதி கொடுக்கிறது என்று தெரிவித்தார்
கொடுப்பவர்களை நீங்கள் தான் போராட்டங்கள் மூலம் அடையாளம் காட்டுகிறீர்கள்..
திமுக நடத்துகின்ற போராட்டங்கள் மூலம் மத்திய அரசுதான் இந்தியாவின் பேரரசு என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்..
தமிழக அரசு மீது உள்ள பலவீனம், தமிழகத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியை மறைப்பதற்காகவும் அதை திசை திருப்பத்தான் மத்திய பட்ஜெட் குறித்து நாடக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றால் அதனை துறைவாரியாக சொல்லுங்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்வது தமிழக முதலமைச்சருக்கு அழகு அல்ல.
இதுவரை கொடுத்த நிதிக்கு கணக்கு எங்கே. ஊழல் பணத்தை மறைக்க ஐஏஎஸ் இல்லை.
ஏதற்காக ஐஏஎஸ், காவல் துறை அதிகாரிகள் மாற்றம் .
அனைத்து வரியை கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டார்கள் என மத்திய நிதி அமைச்சர் கூறிவிட்டார்.
தெலுங்கு தேசம், பிஜேபி இணைந்து போட்டியிடும் போது அமராவதி தலைநகராக கொண்டு செயல்படும் என தெரிவித்தப்பட்டது. அதன்படி சிறப்பு நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
*தமிழகத்தை 3மாநிலமாக பரிக்க வேண்டும். சேலம், திருச்சி, மதுரை என தலைநகராக பிரி அப்போது நிதி கேட்டு பெற்று கொள். அப்போது நாங்கள் 3மாநிலத்திற்கு 45ஆயிரம் கோடி வழங்க முடியும் மத்திய அரசிடம் கேட்டு வாங்கித் தர நாங்கள் தயார் என தெரிவித்தார்
தமிழகத்தில் பெருபான்மையான பூத்துக்களில் முதல் இடத்தையும், 2ம் இடத்தையும் பெற்றுள்ளோம்.
14ம் ஆண்டுகளில், எம்.பி இல்லை, இப்போதும் இல்லை.
அயலக அணி எதற்கு? போதை மருந்து கடத்த பயன்படுத்தும் அணியாக உள்ளது.11 மருத்துவ கல்லுரிக்கு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.எய்மஸ் மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை.
மத்திய அரசின் வலிமையை குறைத்து கட்டினால் அது தேச விரோதம் தான்.
உண்மை வெளி கொண்டு வரவே இந்த செய்தியாளர் சந்திப்பு
வயது வரம்பு குறைப்பது. பணி கொடை இதுவரை வழங்கவில்லை.தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம். இதனை மடை மாற்றம் செய்ய தான்.
உதயநிதி துணை முதல்வர் ஆக்கினால் என்ன தப்பு..எனவே அதனை பெரிதாக நினைக்கவில்லை.
முதல்வரை பற்றி எதிரிராக பேசினால் வழக்கு தொடுக்கப்படுகிறது.டப்பிப் கொடுத்தவர் மீது வழக்கு.அவர்கள் பேசிய பேச்சுக்கு வழக்கு போட்டால் ஸ்டாலின் 10 வருடம் சிறைக்குள் இருக்க வேண்டி வரும்.
அமைச்சர் பொன்முடி வழக்கு வந்த போது மத்திய அரசு குற்றவாளி என் போல காட்டியது.பல ஊழல் செய்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என மத்திய அரசின் மீத வெறுப்பின் காரணமாக 40 தொகுதியை அவர்களுக்கு கொடுத்து விட்டார்கள் என்பது என் கருத்து.கட்சியின் கருத்து அல்ல என செய்தியாளர் சந்திப்பில் பேசினார்
0 Comments