NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி.தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிக்கை

காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி.தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிக்கை

 காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில் கூறுகையில்..


கடந்த வாரம் இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட மீனவர் ராமசாமிக்கு பத்து லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. 


அன்றே இலங்கை கடற்படையால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றொரு மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசீய கூட்டணி சார்பில் கே.எம.செரீப், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 



விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தேவேந்திரகுல மக்கள் முன்னணி தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை பார்த்து, பின்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மீனவர் தலைவர்களோடு சந்தித்து வேண்டுகோள் வைத்தோம்




அதே போல தமிழக முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தோம். எங்களோடு தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI அமைப்புகளும் இதே கோரிக்கையை அரசிடம் முன்வைத்தன. எங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது காணாமல் ஆக்கப்பட்ட மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பத்து லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்க தக்கதாகும்






எங்களின் மற்றொரு கோரிக்கையான மீனவர் படுகொலைக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் - அதுவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதையும் தமிழக அரசு ஏற்று வழக்கு பதிய வேண்டும் எனவும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அரசிற்கு முன்வைக்கிறேன் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments