// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு - 400 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்பு!

திருச்சியில் வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு - 400 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை  நிபுணர்களின் 16 வது  மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இதில் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகள் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது. 




இந்த நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 


மேலும் நேற்றைய தினம் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரத்னா குளோபல் மருத்துவமனை, ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பிரண்ட்லைன் மருத்துவமனை மற்றும் முகேஷ் கேர் மருத்துவமனை, கி.ஆ.பெ மருத்துவ  கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 





முகாமிற்கான ஏற்பாடுகளை மாநாட்டு குழு தலைவர் டாக்டர் ராஜ்மோகன், செயலாளர் அபிஷேக் மற்றும் மருத்துவர்கள்  சுப்பிரமணியன், அழகப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments