திருச்சி மலைக்கோட்டை சுற்றியுள்ள என்.எஸ்.பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, தெப்பக்குளம், காமராஜர் வளைவு, மேயின்கார்டு கேட் ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகள் 25 வருடமாக வியாபாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் அங்குள்ள பெரு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் தரைக் கடைகளை அப்புறப்படுத்தப் போவதாக தகவல் வெளி கொண்டு வந்திருக்கின்றன
இதன் காரணமாக தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கம் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் இணைந்து தரைக்கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
தொடர்ந்து உள்ள செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி:
மேலும் அதிகாரிகள் தரப்பு மற்றும் பத்திரிக்கை வாயிலாக தரைக்கடையை அப்புறப்படுத்த போவதாக செய்தி வந்துகொண்டு உள்ளது இதனால் வியாபாரிகள் அச்சமடைந்த உள்ளனர்
எனவே என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளை வியாபார தளமாக அறிவித்து 25 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முறையாக கடையை ஒதுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து உள்ளோம் கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்
0 Comments