BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் IUML- மாவட்ட தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது




இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அஜீம் தலைமையில் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 






இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்தும்,இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்




இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அறிவுரைகளையும், இளைஞர் அணியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.இதில் இளைஞர் அணியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தார்கள். 




நிறைவாக தாய்ச் சபையின் அரசியல் பணிகளுக்கு மேலும் பலம் சேர்த்திடும் விதமாக திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இளைஞர் அணியின் சார்பில் புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது எனவும், மேலும் திருச்சி கிழக்கு, மேற்கு,திருவரம்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தாய் சபையின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், இன்ஷா அல்லாஹ் விரைவில் மாவட்டத்தின் ஒப்புதலோடு மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்துவது என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 




இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர்கள் நியாஸ் அஹமது,சையது முகம்மது, துணை செயலாளர் முஹம்மது பாசில் மற்றும் நிர்வாகிகள் பஷீர் அலி, ஷேக் தாவூத்,அலாவுதீன், ஷேக் தாவூத், அசாருதீன், நஸ்ருதீன்,அப்துல்லா ஹமீசுதீன்,முகமது சமீர், நவாப் கான் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments