NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** திருச்சி என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருச்சி என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் வணிக பெரிய  நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.


இதனை கண்டித்து நேற்று மாலை 50 க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் என்.எஸ்.பி ரோட்டில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது வியாபாரி ஒருவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் .


உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்தினர்.



பின்னர் தரைக்கடை வியாபாரிகள்  தரையில் அமர்ந்து தரைக் கடை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே என்றும் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகி ஒருவரை கைது செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.





 இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

 இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

0 Comments