// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா -தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா -தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட்டார்.

திரையுலகத்தில் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா  திருச்சி சோனா திரையரங்கில் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எல். ஏ.சினிமாஸ் அதிபர் தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் கலந்துகொண்டு ஸ்டிக்கரை வெளியிட்டார் 

திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். 



இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் ராயல் ராஜ், எஸ்.டி. ராஜ், உதயன், காமராஜ், கண்ணன், பாபு, நோபல்அலெக்ஸ், மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments