திருச்சி உறையூர் பகுதி செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் பத்ரே ஆலம் தர்காவில் கொடியேற்றும் விழா சந்தனம் பூசும் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆகிய விழா வழக்கறிஞர் சையது தாஜுதீன்.தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாஃப் உசேன், மாநில பொதுச் செயலாளர். லியாக்கத் அலி, எம் ஐ.டி. ஷாகுல் அமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
ஹஜ்ரத் பத்ரே ஆலம் தர்காவின் பரம்பரை முத்தவல்லி வகையறா பசல் அகமது, பஷீர் அகமது, ஷபி அகமது அஸ்லம், அரம் வக்பு முத்தவல்லி சையத் அப்துல்லா,எம்ஜிஆர் மண்ற மாவட்ட இணைச் செயலாளர் அப்பா குட்டி என்கிற அப்துல் ரஹ்மான்,திமுக சிறுபான்மை மாவட்ட அமைப்பாளர் அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் மாநில பொதுச் செயலாளர் லியாக்கத் அலி , MIT ஷாகுல் அமீது ஹஜ்ரத் பத்ரே ஆலம் தர்கா நிர்வாகி பரக்கத் மற்றும் மஸ்ஹர், உசேன், ஆசிப் அலிகான், இர்ஷாத் அஹமது கான்,உள்ளிட்டவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments