NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** வருமான வரி படிவத்தினை சரியான தேதிக்குள் தணிக்கை செய்து தாக்கல் செய்ய வேண்டும் - வருமானவரித்துறை முதன்மை ஆணையர் பேட்டி

வருமான வரி படிவத்தினை சரியான தேதிக்குள் தணிக்கை செய்து தாக்கல் செய்ய வேண்டும் - வருமானவரித்துறை முதன்மை ஆணையர் பேட்டி

திருச்சியில் வருமானவரித்துறை சார்பில் இன்று பாரதியார் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை வருமானவரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 


இந்தக் கூட்டத்தில் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் பேசுகையில்..


கூட்டுறவு இணை ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க இந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்காக பல்வேறு இணக்கத் தேவைகள் குறித்து விளக்கினார். முதலில் கூட்டுறவு சங்கங்கள் சரியான தேதிக்குள் வருமான வரி படிவத்தினை சட்ட பிரிவுகளுக்கு உட்பட்டு உரிய நேரத்தில் தணிக்கை செய்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம் வரி விலக்கினை எளிதாக பெறலாம். குறிப்பாக, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க சட்ட பிரிவு படி, முறையாக கணக்குப் புத்தகங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் அத்தகைய கணக்குப் புத்தகங்களை தணிக்கை செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு கணக்குப் புத்தகங்களைப் பராமரிக்க மற்றும் அதைத் தணிக்கை செய்யத் தவறினால், அது 2 சட்டங்களையும் மீறுவதாகும் என்று தெரிவித்தார்.



மேலும், வருமான வரி சட்ட பிரிவு 139(1)ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் குறித்தும், பிரிவு 8O பி-யின் விலக்கு, வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் தொலைபேசி எண் பதிவிடுதல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க வேண்டும், மின்-தாக்கல் போர்டல் மூலம் அனுப்பும் பல்வேறு அறிவிப்புகள், தகவல்களுக்கு எளிதாக பதில் அளிக்க முடியும்.இந்த தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் முறையீடுகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்தல், வரிக் கோரிக்கைகளை உரிய நேரத்தில் செலுத்துதல் போன்றவை குறித்தும் விரிவான ஆலோசனை வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து வருமானவரிச்சட்டம் குறித்து திருச்சி வருமானவரி கூடுதல் ஆணையர் நித்யா துரைராஜ்  காணொளி விளக்க காட்சி வாயிலாக விளக்கமளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை இணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன், திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்  மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments