திருச்சி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கமிட்டி அமைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் AITUC,CITU மனிதநேய வர்த்தக சங்கம் தலா இரண்டு இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு இன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது
அதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி அவர்கள் தேர்தலில் போட்டியிட மாநகராட்சி ஆணையரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அளிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
AlTUC சார்பில் பொது பிரிவிற்கு மாவட்ட செயலாளர் A.அன்சர் தின், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கு S.ரெங்கசாமி என்கிற சிவாவும் ,சிஐடியு சார்பில் பெண்கள் பிரிவில் S.செல்வியும் உடல் ஊனமுற்றோர் பிரிவில் கணேசனும், தலித் பிரிவில் லலிதாவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
மேலும் இந்த நிகழ்வில் மாநில IPP துணை செயலாளர் ரபீக்,MVS திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் கபீர்,மாவட்ட செயலாளர் அன்சாரி , வழக்கறிஞர் காஜா, ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரங்கராஜன் AITUC மாவட்ட தரைக் கடை வியாபாரிகள் , CITU மாவட்ட தரைக்கடைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

0 Comments