NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கொட்டும் மழையிலும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து, கையில் திருவோடு ஏந்தியபடி விவசாயிகள் நூதனபோராட்டம்

கொட்டும் மழையிலும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து, கையில் திருவோடு ஏந்தியபடி விவசாயிகள் நூதனபோராட்டம்

விவசாயிகளை திருவோடு ஏந்தி தெருவில் நிற்கவைத்த தமிழக அரசு கொண்டுவந்த நிலஒருங்கிணைப்புச் சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தியும், இலவசவிவசாயம் மின் இணைப்புபெற தடையாக உள்ள மத்தியஅரசின் புதிய மின்சார திருத்த மசோதாவை கைவிடவலியுறுத்தியும், விவசாய தொழிலுக்கு ஆள்பற்றாக்குறை நிலவும்சூழலில் 100நாள் தொழிலாளர்களை விவசாயத் தொழிலுக்கு பயன்படுத்திட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆட்சியர்அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.


ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள், விவசாயிகளை திருவோடு ஏந்தவைக்கும் தமிழக அரசு கண்டித்து கொட்டும் மழையிலும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில்  திருவோடு ஏந்தியும், தலையில் முக்காடு போட்டவாறு 


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டனம் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




இலவச மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், தேர்தலின்போது அறிவித்தபடி மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யவேண்டும் மேலும் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் நெல்லுக்கு லாபகரமான உரியவிலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்யவேண்டும்எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Post a Comment

0 Comments