BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** அம்பேத்கர் நினைவு நாளையொட்டி திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


ஜங்சன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட அவைத்தலைவர்  ராமலிங்கம்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர்  ப.செந்தில்நாதன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


மேலும் இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  வக்கீல் பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், நிர்வாகிகள் நெல்லை லட்சுமணன், வேதராஜன், ராமமூர்த்தி,  கல்நாயக் சதீஷ்,  கம்ருதீன், பெஸ்ட் பாபு,  உமாபதி, கதிரவன்,  கருப்பையா, சண்முகம், குப்புசாமி, சாந்தா, 



தண்டபாணி, செந்தில்குமார், நாகூர் மீரான், கல்லணை குணா, சுதா, அகிலாண்டேஸ்வரி, மாரிமுத்து, நிக்சன், ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் ஷா, செந்தில், முஸ்தபா, சுமதி, ஆறுமுகம், அஸ்வின் குமார், தனசேகர், கைலாஷ் ராகவேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments