BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் - திருச்சியில் தமுமுக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் - திருச்சியில் தமுமுக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் -2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்


பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.




மதத்தின் பெயரால் இந்தியாவை கூறுபடுவதை தவிர்த்துவிட்டு, மதச்சார்பின்மையுடன் இந்தியா திகழவேண்டும், அதற்கு ஆளும் அரசியல்கட்சிகள் பிரிவினைவாதமின்றி செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது



இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா வரவேற்புரை ஆற்றினார்



இந்நிகழ்வை திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் A.பைஸ் அஹமது MC,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அப்துல் கனி,பெரம்பலூர் மாவட்ட தலைவர் A.குதரதுல்லா,கரூர் மாவட்ட தலைவர் S.M.சாகுல் அமீது மற்றும் அரியலூர் மாவட்ட தலைவர் M.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் S.பீட்டர் அல்போன்ஸ், தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை சையது,தலைமை பிரதிநிதிகள் N.நூர்தீன்,M.ஜெய்னுலாபுதீன்,E.தாஹிர் பாஷா,IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments