// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் பஜார் மைதீன் புத்தாண்டு வாழ்த்து

திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் பஜார் மைதீன் புத்தாண்டு வாழ்த்து

2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை உலக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழக காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் பஜார் மைதீன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..


புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறந்தது இனிய புத்தாண்டு2025 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

Post a Comment

0 Comments