NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் : காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் : காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார்...


 அதில், கூறுகையில்...திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர்' சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக நீங்கள் முயற்சி செய்வதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, இஸ்லாமியர் ஓட்டுக்களை பெறுவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன்.


அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, திமுகவுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள் என்று கூறினார். திமுகவிற்கு மட்டுமே இஸ்லாமியர்கள் ஓட்டு போடுகிறார்கள் என்ற கோபத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் ஏளனமாக இழிவு படுத்தி தொடர்ந்து பேசி வரும் சீமானுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு சீமான் மீது தம் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments