NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சி எடமலைப்பட்டிப் புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்வில் 57 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் அவர்கள் தலைமையேற்றார். 


பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் திருமதி புஷ்பலதா அவர்கள் முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. புஷ்பவல்லி அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார். 


இந்த நிகழ்வில் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கி.சதீஷ்குமார் அவர்களும் இசைத் துறை மாணவர் செல்வன். ஆகாஷ் அவர்களும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்களிடம் அன்பை இனிப்பை பகிர்ந்து நடனம் ஆடினர்.


தொடர்ந்து ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .


இந்த நிகழ்வில் திரு.முத்துசெல்வம் அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் முன்னதாக கிறிஸ்துமஸ் கேக் வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பங்கேற்றனர் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கொண்டாடினர் அரசு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது அனைவராலும் அனைத்துப் பெற்றோர்களாலும்ம் வரவேற்கப்பட்டது பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments