NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் மஜக சார்பில் 76வது குடியரசு தினவிழா ..!மஜக மாநில இளைஞர்அணி செயலாளர் தேசிய கொடியேற்றினார்

திருச்சியில் மஜக சார்பில் 76வது குடியரசு தினவிழா ..!மஜக மாநில இளைஞர்அணி செயலாளர் தேசிய கொடியேற்றினார்

 நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு நிகழ்வாக திருச்சி மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முஹம்மது ஷரிப் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.


தமிழ்நாடு முழுக்க குடியரசு தின விழாவை மஜகவினர் சிறப்பாக முன்னேடுக்க வேண்டுமென தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ், ஹபீப் ரஹ்மான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜமீர் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பஷாரத், பொருளாளர் நியாஸ், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஹம்ருதீன், மருத்துவ சேவை  அணி செயலாளர் சேக் உசேன், மாணவர் இந்தியா நிர்வாகிகள் முகம்மது ரபிக், சீசம், அண்ணா நகர் பகுதி செயலாளர் ஹபீப் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், வணிகர்கள், பெண்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர். 


Post a Comment

0 Comments