NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின விழா SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும் பொருளாளர் பிச்சை கனி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்..மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


மூவர்ண தேசிய கொடியை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்கள் ஏற்றி வைத்து,தலைமையுரை ஆற்றினார்.

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் K.முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சிராஜ், SDTU மாநில செயலாளர் K.முஹம்மது ரபீக், திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I.ஷேக் முகம்மது, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,  கிழக்கு தொகுதி இணைச் செயலாளர் ராயல் அப்பாஸ், SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் சக்கரை மீரான், விம் மாவட்ட தலைவர்  தவுலத் நிஷா, விம் திருவெறும்பூர் தொகுதி தலைவர் பாத்திமா, வர்த்தகர் அணி தலைவர் Dr.S.பக்ருதீன், மருத்துவ அணி தலைவர் Dr.S. இக்பால், கல்வியாளர் அணி செயலாளர் பத்ரு ஜமான்,  தொண்டரணி தலைவர் முகம்மது ஆரிப், தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் KSA. ரியாஸ், கிளை நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments