இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின விழா SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் வர்த்தக அணியின் சார்பாக காந்தி மார்க்கெட் பகுதியில் வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது..
SDPI கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மதர்.ஜமால் முகமது மற்றும் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார்
இந்நிகழ்வில் மூவர்ண தேசிய கொடியை வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் Dr.பக்ருதீன் அவர்கள் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்...மாவட்ட பேச்சாளர் முகமது வாசிக் சிறப்புரையாற்றினார்..
இதில் தொண்டரணி மாவட்ட தலைவர் ஆரிப் ஊடக அணியின் மாவட்ட தலைவர் உபைதுர் ரகுமான் மற்றும் மேற்கு தொகுதி துணைத்தலைவர் முகமது சலீம் கிழக்கு தொகுதி இணைச்செயலாளர் ராயல் அப்பாஸ் மேலும் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக துணைத்தலைவர் முகமது அன்சாரி நன்றியுரை ஆற்றினார்.
0 Comments