NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் 76 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமுமுக & மமக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் 76 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

 இந்திய திருநாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் M.A முகமது ராஜா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து காட்டூர்,காமராஜ் நகர்,அரியமங்கலம்,பூக்கொல்லை,பாலக்கரை, நத்தர்ஷா பள்ளிவாசல், சமஸ்பிரான் தெரு,சவுக்,மரக்கடை,KK நகர் ஆகிய கிளைகளில் இந்திய திருநாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் போன்றவற்றை வழங்கினர். 


இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்  காஜாமைதீன்,மாவட்ட துணை செயலாளர் காசிம்,


ரஹ்மத்துல்லா,பீனிக்ஸ் ராஜா, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரபிக்,வர்த்தக அணி செயலாளர் அன்சாரி, விழி அணி செயலாளர் முகமது அலி ஜின்னா, 

விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி துணைச் செயலாளர் சையது, சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் இலியாஸ், பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments