NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியரசு தின நிகழ்ச்சி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியரசு தின நிகழ்ச்சி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியரசு தின நிகழ்ச்சி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 5ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி திருச்சி பீமநகர் தெற்கு யாதவ தெரு தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் உள்ள வளாகத்தில்  நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறந்த சமுதாயம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



மேலும் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரி சமீரா பர்வீன் ஆலிமா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்கி. முன்னதாக மாநில செயலாளர் அப்பாஸ் அலி வரவேற்புரையாற்ற, முடிவில் மாவட்டத் துணை செயலாளர் இனாம்குளத்தூர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.


 இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஷாஹீன், மாநில துணை தலைவர் பக்ருதீன், மாநில துணை செயலாளர் அன்சர்தீன், மாவட்ட தலைவர் சாதிக்பாஷா, மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட செயலாளர் சதக்கத்துல்லாஹ், 


மாவட்ட பொருளாளர் அப்துல் கலாம், மாவட்ட பேச்சாளர் அப்துல் மஜீத், ஆழ்வார்தோப்பு செயலாளர் உசேன், பெண்கள் பொறுப்பாளர் நஸிமாபானு ஆலிமா, உட்பட 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments