NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது

 திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு காலை ஒலிம்பிக் தீப ஒட்டம் நடைபெற்றது.



தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் நடனமாடி உற்சாகமூட்டினர்.


இதனைத்தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.



விழாவில் குடந்தை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு பாக்கியசாமி, கே.ஆர்.எஸ் குரூப் தொழிலதிபர் கிங்ஸ்லி ரூபன், ரம்யா சத்தியநாதன் கல்வி நிறுவனங்கள் சேர்மன் சத்தியநாதன், சிடிசி மாநில தலைவி அமலோர் மேரி, தாளாளர் கஸ்பர்,பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments