NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்க விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்க விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம்  அருகே உள்ள காதி கிராப்ட் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் விளக்க உரையாற்றினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி துவக்க உரையாற்றினார்.முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுறையாற்றினார்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ திரும்ப பெற வேண்டும்,சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின்படி பனிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும்.


மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் 12349 கிலோமீட்டர் சாலைகள் 210 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் சுங்கவரி வசூல் கொள்ளை நடத்தப்படும் அனுமதியோம்!

மாநில நெடுஞ்சாலை ஆணையாத்தால் ஐந்தாயிரம் அரசு பணியிடங்கள் ஒழிக்கப்படும் 

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரித்திட வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாத 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 28ஆம் தேதி முடிய மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments