// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் முதலிடம் பிடித்த சாதனை

நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் முதலிடம் பிடித்த சாதனை

கோயம்புத்தூர் கே.பி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான சிலம்பு போட்டியில் (UTJ ஸ்போர்ட்ஸ்) யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஐந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 


போட்டியில் பங்கெடுத்த அப்துல்லாஹ் 16 மதிப்பெண்கள் பெற்று 17 வயதுக்கான சுற்றில் முதலிடமும், முஹம்மது சல்மான் 15 மதிப்பெண்கள் பெற்று 15 வயதுக்கான சுற்றில் முதலிடமும், கனிஷ் 12 வயதுக்கான சுற்றில் 15 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், யோகீஷ்வரன் 10 வயதுக்கான சுற்றில் 16 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மற்றும் சாய்கேஷ் 7 வயதுக்கான சுற்றில் 14 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் என கலந்து கொண்ட ஐந்து மாணவர்களும் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும் இம்மாணவர்கள் மென்மேலும் வெற்றி பெறுவதற்கும் மற்றும் இதற்காக பொருளாதாரம், உடல் உழைப்பு செய்யும் அனைவருக்கும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments