இந்திய திருநாட்டின் 76 வது குடியரசுதினம் நாளைமறுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நாட்டின் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில், மோப்பநாய் உதவியுடன் இரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும், ஹவுரா ரெயிலில் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் ரெயில்பெட்டிகளில் சென்று மோப்பநாய் டான் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றை கொண்டு சோதனை செய்தனர்.
அதேபோல திருச்சி ஜங்சன் ரயில்நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் கொண்டுசெல்லும் இடங்கள் மற்றும் தண்டவாளங்கள் ஆகியவற்றில் சோதனை செய்தனர்.
0 Comments