BREAKING NEWS *** தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு ***** சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *** TATA ΑΙΑ ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி - காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு

TATA ΑΙΑ ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி - காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு

TATA ΑΙΑ ஆயுள் காப்பீடு கனவு குழு நிறுவனம் சார்பில் சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. 


இந்த விழிப்புணர்வு பேரணிக்கு TATA AIA லைஃப் திருச்சி கிளை மேலாளர் சுரேஷ் அசோகன் தலைமை தாங்கினார்.  

சிறப்பு அழைப்பாளராக காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் கலந்து கொண்டு காப்பீடு திட்டத்தின் அவசியம் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இந்த விழிப்புணர்வு பேரணியானது திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கப்பட்டு கோர்ட் சாலை வழியாக கண்டோன்மென்ட் காவல் நிலையம் சாலை, பாரதியார் சாலை, 

ஒத்தக்கடை சிக்னல், தலைமை தபால் நிலையம் , பாரதிதாசன் சாலை வழியாக சென்று TATA AIA லைஃப், கிளை அலுவலகத்தை சென்று நிறைவடைந்தது. 

இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஊழியர்களின் பதாகைகளில் சமூக கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றது.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி TATA AIA லைஃப் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments