NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மீது தாக்குதல் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி சார்பில் மனு

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மீது தாக்குதல் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி சார்பில் மனு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (05.02.2025) இரவு 9:45 மணி அளவில் சுமை பணி தொழிலாளர்களுக்கும் சில போதை ஆசாமிகளுக்கும் நடந்த தகராறின் எதிரொலியாக 60க்கும் மேற்பட்ட போதை ஆசாமிகளால் காந்தி மார்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் வியாபாரிகளின் கடைகள் பொருட்கள் என்று ஒட்டுமொத்தமாக சூறையாடபடிருக்கிறது


SDPI வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா தலைமையில் காவல்துறை துணை ஆணையர் அவர்களை சந்தித்து புகார் மனு அளித்தனர்  இதில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் dr பக்ருதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர் தளபதி அப்பாஸ் வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா உடன் இருந்தனர்.


காந்தி மார்க்கெட் ஒவ்வொரு நுழைவாயிலும் இரண்டு காவல் துறை அதிகாரிகளே தொடர்ச்சியாக  பணி அமர்த்த வேண்டும் காந்தி மார்க்கெட் அருகில் இருக்கும் மது கடையை நிரந்தரமாக எடுக்க கோரியும் மார்க்கெட் முழுவதும் சிசிடிவி கேமரா பழுது பார்த்து சரிவர இயங்குவதை உறுதி செய்யக் கோரியும் காவல்துறை துணை ஆணையரிடம் மனு அளித்தனர்



பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நீதி கேட்டு அனைத்து வியாபார சங்கங்களினுடைய பிரதிநிதிகளும் காவல் நிலையத்தில் ஒன்று கூடினர்

Post a Comment

0 Comments