// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் மஜக 10 ஆம் ஆண்டு துவக்க விழா இளைஞர் அணி மாநில செயலாளர் ஷெரிப் பங்கேற்பு

திருச்சியில் மஜக 10 ஆம் ஆண்டு துவக்க விழா இளைஞர் அணி மாநில செயலாளர் ஷெரிப் பங்கேற்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகமெங்கும் மஜக-வினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். 


அதன் ஒரு நிகழ்வாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அவைத்தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகம் மற்றும் பாலக்கரை ஆகிய பகுதியில் கட்சி கொடி ஏற்றி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.


இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ், ஷேக் அப்துல்லா, ஹபிப் ரஹ்மான், அஸ்பாக் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிஃப், பொருளாளர் ஹம்ருதீன், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீத், 



சதாம் உசேன், சாதிக், கொள்கை விளக்க அணி செயலாளர் ரஷீத், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பஷாரத், பொருளாளர் நியாஸ், மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் உசேன்


IKP துணைச் செயலாளர் சதாம், காட்டூர் பகுதி செயலாளர் ஹனிபா, துணைச் செயலாளர் முஜிபுர் ரகுமான், தில்லை நகர் பகுதி செயலாளர் ஹபீப் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments