// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட போராட்டமாக தர்ணா போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. 


இந்த தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்




நெடுஞ்சாலைத்துறையில் பணியில்  நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 11 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பனிக்காலமாக முறைப்படுத்தி அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments