வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று நகல் கிழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொது செயலாளர்கள் முகமது சித்திக், முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் மதர் ஜமால்முகமது வரவேற்புரை வழங்கினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல செயலாளர் நியமத்துல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் மற்றும் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சேக் முகமது ஆகியோர் அரசமைப்பு விரோத வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி அப்பாஸ், மாவட்ட செயலாளர் சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சைகனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (எ) பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,
ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், சுற்றுச்சூழல் அணி தலைவர் ரஹ்மத்துல்லாஹ், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ரியாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான் உள்பட நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட துணை தலைவர் தளபதி அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.
0 Comments