// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சி தொழிற்சங்கம் MJTS நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு ...!

திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சி தொழிற்சங்கம் MJTS நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு ...!

மனிதநேய ஜனநாயக கட்சி யின் சார்பு அணி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமன நிகழ்வு மாவட்டச் செயலாளர் பக்கிர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில் அவைத்தலைவர் ஷேக் தாவூத் அவர்களது முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி எம்.முஹம்மது ஷரிப் அவர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் நலன், தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.


அதன்பின் MJTS க்கு திருச்சி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகம் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை பேரில் நியமனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் (MJTS) மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தில் 250 உறுப்பினர்கள் புதிதாக சேர்ப்பது என இலக்காக தீர்மானிக்கப்பட்டது.



இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி மற்றும் நிர்வாகிகள் கபீர், ரஹ்மான், யாசர், அப்பாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments