// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை இணைந்து நடத்திய சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை இணைந்து நடத்திய சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைபெண்கள் விருது வழங்கும் விழா ஹோலி கிராஸ் கல்லூரியில் நடந்தது.


ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக பணி துறை இணைந்து பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு "சாதனை பெண்கள் விருது' வழங்கும் விழா ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்றது. 


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் ஜமீாபாட்ஷா அவர்களது மனைவி ரொட்டேரியன் சகிலா ஜமீர் கலந்து கொண்டார்கள். 


சிறப்பு அழைப்பாளராக மாவட்டம் 3000 மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் ரொட்டேரியன் ஏ கே எஸ் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆண்டுதோறும், ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக பல்வேறு துறை சார்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த வருடமும் ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை இணைந்து நடைபெற்றது. 


மேலும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா இராஜகுமாரி வாழ்த்துரை வழங்கினார். 


இவ்விழாவில் 35 பெண்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார் மேலும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூக நலத்துறை தலைவி அனிதா அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.

Post a Comment

0 Comments