தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் அமலோற்பவம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி 70 வயதுக்கு ஓய்வுதிகளுக்கு 10சதவீதமும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் என்பது வயது எட்டியவுடன் 20சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓவிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், கம்யூடேஷன் தொகை பிடிக்கும் காலத்தை பத்தாண்டாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரங்கராஜன், தியாகராஜன், கோபாலகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் தியாகராஜன் கூறுகையில்...கடந்த 20 வருடமாக எங்களது கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக செவி கொடுக்க வேண்டும்
நாங்கள் கோரிக்கை வைக்கும் பொழுது நிதி பற்றாக்குறை காரண காட்டி காரணம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, தொடர்ந்து அரசு இப்படி செயல்படுமானால் பல லட்சம் ஊழியர்களின் பேரதரவை இலக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
0 Comments