தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் விவசாய தொழிலாளர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 72 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி நடைபெற்றது.
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கயல்விழி ஆகியோர் தலைமையில் விவசாய தொழிலாளர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி இணைந்து காட்டூர் எஸ் ஐ டி கல்லூரியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 72 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யா பேகம் வரவேற்றார் .கோ.வி நாகராஜ் மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் நன்றி கூறினார்
மேலும் இதில் 72 பெண்மணிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்றும் இந்திய எதிர்ப்போம் என்றும் தமிழ் எங்கள் மூச்சு என்றும் வாசகங்கள் எழுதி கோலங்களை இட்டனர் மேலும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாநகர செயலாளர் மண்டல மூன்றின் தலைவருமான மதிவாணன் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் சிறப்பாக கோலமிட்ட மகளிருக்கு பரிசுகளை வழங்கினார்..
மேலும் இந்த கோலப் போட்டியில் மாவட்ட துணை செயலாளர் லீலா வேலு அணிகளின் நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர் செயலாளர் உட்பட நிர்வாகிகள் தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
0 Comments