சாரதாஸ் நிறுவனம் அனைத்து வீடுகளிலும் ஒரு குடும்ப அங்கத்தினர் போல் என்றைக்குமே இருந்து வருகிறது. ஒவ்வொரு பண்டிகை மற்றும் விழாக்கள் மற்ற சாதாரண நாட்களின் போது பொதுமக்களுக்கு நினைவுக்கு வருவது மத நல்லிணக்கத்துடன் செயல்படும் சாரதாஸ்தான்.அந்த பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தரத்துடன், நியா யமான விலையில் புதுபுது ரகத்துடன், பல்வேறு மாடல் களில் தள்ளுபடி விலையுடன் ஜவுளிகளை விற்பனை செய்து வருகிறது.
நெசவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு செல்லவும் நாம் பாரம்பரிய ஆடை உற்பத்தி முறையை அனைவருக்கும் குறிப்பாக இளைய தலை முறையினருக்கும், நினை வூட்டி அவர்கள் மனதில் நம்முடைய கலாச்சாரத்தை பதிய வைக்கும் ஓர் புதிய முயற்சியை எடுத்து அதில் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி சாரதாஸ் நிறுவனத்தின் பட்டு பிரிவு வளாகத்தில் சொந்த செலவில் தறி கூடம் அமைக்கப்பட்டு அதில் பட்டு சேலைகளை நெய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த தறியில் தயாரிக்கும் ஒவ்வொரு பட்டு சேலையையும் சாரதாஸ் நிறுவனம் இறைப்பணிக்கு அர்ப்பணித்து வருகிறது.
சில மாதங்களுக்குப் முன்பு முதல் பட்டு சேலையை உற்பத்தி செய்து அதனை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கினார்கள். தற்போது 2-வது முறையாக திருச்சி மதுரை ரோட்டில் உள்ள நத்ஹர்வலி தர்கா மகானுக்கு பட்டு போர்வை தயாரிக்கப் பட்டு, நிறுவன வளாகத்தில் நேற்று. மகானுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி
சாரதாஸ் நிர்வாக இயக்குனர்கள் ரோஷன், சரத் ஆகியோர் முன்னிலையில் அவ்ரங்கசிப், தாஜுதீன் மற்றும் மன்சூர் ஆகியோர், ஹஜ்ரத் தபலே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா தலைமை அறங்காவலர் அல்லா பக்ஷ் (எ)முகமது கௌஸ் மற்றும் தலைமை கலிபா சையத் சாதாத் கலந்தர் சாஹிப் ஆகியோரிடம் பட்டு போர்வையை வழங்கினார்கள்.
இது குறித்து திருச்சி சாரதாஸ் நிர்வாக இயக்கு னர்கள் ரோஷன், சரத் ஆகியோர் கூறியதாவது:-
திருச்சி சாரதாஸ் வளாகத்தில் பிரதான பகுதியில் தறி கூடம் அமைக்கப்பட்டு, அதில் நெசவுக் கலைஞர்களைக் கொண்டு பட்டுச்சேலையை நேர்த்தியாக செய்யும் அழகை வாடிக்கையாளர்கள் நேரடியாக கண்டு களிக்கும் வகையில் அமைத்துள்ளோம். இதனை, திருச்சி சாரதாஸ்க்கு வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பார்த்து ரசித்து. செல்கின்றனர். பாராட்டி
இந்த தறியில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பட்டுச்சேலையும், இறைப்பணிக்கு அர்ப்பணிக் கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, இந்த புதிய தறியில் நெய்யப் பட்டுள்ள பட்டு போர்வையை, திருச்சி நத்ஹர்வலி தர்கா மகானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த புடவைகள், சர்வ சமய ஆலயங்களுக்கும் சமர்ப்பிக் கப்படும். மேலும், வழக்கம் போலவே, சுபமுகூர்த்த பட்டு, ஜவுளி மற்றும் ரெடிமேட்ரகங்களை திருச்சி சாரதாஸ்-ல் 12 சதவீத தள்ளுபடியில் உன்னதமான உணர்வுடனும், மனநிறை வுடனும் வாங்கி, புதுவித அனுபவத்தை பெறுவதோடு என்றென்றும் தங்கள் முழு ஆதரவை வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments