திருச்சி வனவியல் விரிவாக்க அலுவலகம், எம்.ஆர்.பாளையத்தில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருச்சி வனக்கோட்டம் இணைந்து விவசாயிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கான காலநிலை திறன் மிகு வேளாண்மை,நீர்வள மேலாண்மை மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமியின் அறிவுரையின்படியும், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆலோசனைபடியும் நடைப்பெற்றது.
உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் , வனவியல் விரிவாக்க அலுவலர் , தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்சபை மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் முக்கிய காரணியாக மரம் நடுதல் அமைந்துள்ளது என்ற கருத்துக்களை பதிவு செய்து பங்குபெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கினார்.மேலும் இந்த ஒருநாள் கருத்தரங்கு கூட்டம் விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கும் பயன்பெறும் வகையில் அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளசரக அலுவலர் ரவி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் விக்னேஷ் வனவர், கோகிலா வனவர் மற்றும் இதர அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
0 Comments