NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மண்ணச்சநல்லூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பங்கேற்பு

திருச்சி மண்ணச்சநல்லூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பங்கேற்பு

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி -மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் கலந்து கொண்டு நோன்பு சிறப்பித்தார் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் சமூக  நல்லிணக்கம்  இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் அனைத்து இன மக்களும் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தினமும் பசித்திருந்து நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி மண்ணச்சநல்லூர் வடக்கு ஏரிமிஸின் தெரு மற்றும் பாரதி நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்த சமுதாய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பள்ளிவாசல் தலைவர்கள் அபுபக்கர் மற்றும் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். மேலும் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டு நோன்பு திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் மதங்களைச் சேர்ந்தவர்கள்   மற்றும் மண்ணச்சநல்லூர் அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து அனைவரும் நோன்பு திறந்தனர். 


மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மத பேதமின்றி இஸ்லாமியர்களோடு அமர்ந்து அனைத்து மதத்தினரும் நோன்பு திறந்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments