NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் - அகில உலக பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் - அகில உலக பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை

நீதி கட்சியின் வைரத்துனாய் விளங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் நினைவு நாளையொட்டி  இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு பார்க்கவ குல சங்கத்தின் நிர்வாகி திருமலை ரவி தலைமையில் நிர்வாகிகள் ஆனந்தன் இமானுவேல் நிர்மலா சதீஷ் ஸ்டாலின் சேலம் பிரசாத் சேலம் சதீஷ் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமலை ரவி ...பார்க்கவகுல சங்கத்தின் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய அகில பாரத பார்க்கவ குல சங்கம் என்ற பெயரில் தற்போது தமிழக அளவில் துக்கப்பட்டுள்ளது, அதனை தேசிய சங்கமாக பதிவு பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் மறைந்த இடத்தில்  மணிமண்டபம் கட்டப்பட வேண்டும், பார்க்கவ குல சமுதாயத்தை சேர்ந்த 3சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எங்கள் சமுதாயத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த அமைச்சரவிலேயே அமைச்சர் பதிவை வழங்க வேண்டும்,


மணிமண்டபத்தில் சரி ஏ.டி .பன்னீர்செல்வம் என பதிவிடப்பட்டுள்ளது. ஆனால்  பெரும்பிடுகு முத்திரையர் என பதிவிட்டது போல சர்.ஏ.டி பன்னீர்செல்வம் உடையார் என மாற்றப்பட வேண்டும், எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் அந்த கொலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி ஓமலூர் பள்ளியை சேர்ந்த ஓமனா என்ற மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments