NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச்செயலாளர் துபாய் கே.அன்வர்அலி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுபேர்கான் முன்னிலை வகித்தார்.  

திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
கே.என்.நேரு வழிக்காட்டுதல் படி

 மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், 

மாநகராட்சி கோட்டத்தலைவர் துர்காதேவி, கவுன்சிலர் புஷ்பராஜ், வட்ட செயலாளர் மூவேந்திரன், திருச்சி மத்திய மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் மார்ட்டின் குழந்தை ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில் மாநகர அமைப்பாளர் அக்பர் அலி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments