மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அப்பாவிகள் 28 நபர்களுக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் நிகழ்வு மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ ) பாபு அவர்கள் தலைமையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரிப் கலந்துகொண்டு இரங்கல் உரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் ஜமால், மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ், ஹபீப் ரஹ்மான், திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் தலைவர் வழக்கறிஞர் திலீப், வெள்ளாமை இயக்கச் சகோதரர்கள் ஜோஸப்,
அகில ராஜ், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வரகனேரி காதர், பைசல் மற்றும் அல் ராசிக், மஜக நிர்வாகிகள் அப்துல் ரஷீத், யாசர் ஷெரிஃப், பசாரத், நியாஸ், ரபிக், ABR ஆசிக், அப்பாஸ், அன்வர், மைதீன், முஹம்மது உட்பட பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று இரங்கல் தெரிவித்தனர்.
0 Comments