NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

 திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில்  காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்விற்கு முன்னாள் திருச்சி பாராளுமன்ற  உறுப்பினரும்,  முன்னாள் மத்திய மாநில  அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். 


அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இருந்து காந்தி சிலை வரை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் வேலுச்சாமி, பெனட் அந்தோணி ராஜ் மாநில பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் பிரியங்கா படேல் அணித்தலைவர்கள் பஜார் மொய்தீன், ஷீலா  மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments