NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மஜக நடத்தும் திருச்சி இரயில்வே ஜங்ஷன் முற்றுகைப் போராட்ட அழைப்பு

மஜக நடத்தும் திருச்சி இரயில்வே ஜங்ஷன் முற்றுகைப் போராட்ட அழைப்பு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மஜக மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில்...மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா - 2024 யை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அதனைத் தொடர்ந்து மஜக தலைவரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயக அறவழிப் போராட்டம் நடத்திட முனைந்து கொண்டுள்ளோம் அதன் ஒரு நிகழ்வாக திருச்சியில் வருகின்ற 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 04.00 pm மணியளவில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது




இந்த போராட்டத்தில் தலைவர் M.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றுகிறார்.மேலும், 
மஜக மாநிலச் செயலாளர் வல்லம் அகமது கபீர் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் 


அது சமயம் தாங்களும், தங்களது தோழர்களோடும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் என மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷெரிப் தெரிவித்துள்ளார் 


Post a Comment

0 Comments