வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய திருநாட்டில் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதை பேணிக் காக்கும் கடமை அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு வாரிய சட்டத்தை திருத்துவதற்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து இஸ்லாமியர்கள் சார்பாகவும், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு தமது அறிக்கையில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் தெரிவித்துள்ளார்.
0 Comments