// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர்  விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,  திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சோலை , ஸ்ரீரங்கம் அடைய வளஞ்சான் வீதி , திருவானைக்கோவில், ஆகிய பகுதிகளில் நீர் , மோர் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர், பழரசம், தர்பூசணி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை கொடுத்து தாகத்தை தணித்தனர் .


தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. 

இவர்களின் இந்த சேவையை பொதுமக்கள் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.மாநகர மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சக்தி,  ஜீவா,  கார்த்திக்,  சதீஷ், அருண்,கருப்பையா, செல்வம் , தினேஷ், விஜய் மற்றும் பிற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments