திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல மாநில கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட கார் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகன வணிகர்களால் வழங்கப்படும் ஆவணங்களை பணி முடித்த பின்னர் அதன் உரிமையாளர்களுக்கு தபாலில் அனுப்பும் நடைமுறையை நீக்க வேண்டும், உரிமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கடிதம் கொண்டுவரும் வாகன வணிகர் இடம் அலுவலகப் பணிகளை முடித்து அந்த ஆவணங்களை எங்களிடம் கொடுக்கும் பழைய நடைமுறையை அமல் படுத்த வேண்டும், மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிறு,குறு வாகன வணிகர்களுக்கு எதிராகவும் கொண்டுவரும் புதிய போக்குவரத்து சட்டங்களை மாநில வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகங்களில் அமல்படுத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் அறிவழகன், தனபால், நிர்வாகிகள் சிவக்குமார், அறிவழகன், ஷேக்மொய்தீன், முத்துகுமார், அப்துல்ஹமீதுகான், அபூபக்கர், ஷேக்மொய்தீன் உள்ளிட்ட வாகன வணிகர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் சிவகுமார்
ஆர்.சி புக் தொடர்பாக 2002ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பினர் அதனைத் தொடர்ந்து அதனை அரசனையாக மாற்றி உள்ளனர் அந்த அரசாணையில் ஆர்.சி புத்தகத்தை நேரடியாக தபாலில் அனுப்பும் முறையை ரத்து செய்து பழைய முறையின்படியே உரிமையாளர் கடிதம் கொடுத்தால் அதற்குரிய பணியை முடித்து ஆர்சி புத்தகத்தை முகவரிடம் நேரடியாக கொடுக்கும் முறையை செயல்படுத்த வேண்டும்,
போலியான இடைத்தார்கள் செயல்படுவதால் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இடைத்தரங்களை ஆதரிப்பது யார் என்று கேள்வி உள்ளது. நாங்கள் பெரிய ஓட்டு வாங்கியா இருக்கிறோம், கடந்த முறை இந்த அரசை நாங்கள் ஆதரித்தோம். இந்த நடைமுறையை விரைவில் செயல்படுத்தவில்லை என்றால் சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என தெரிவித்தார்.
0 Comments