NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வக்பு திருத்த மசோதாவை அமல்படுத்தி வக்பு சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த மசோதாவை அமல்படுத்தி வக்பு சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.வக்பு திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, வக்புசொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவரும் வக்பு திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட துணைத் தலைவர் Y. ரஹீம்,மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் ஆகியோர்கள்  முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த  ஆர்பாட்டத்தில் மாநில பேச்சாளர் K.முபாரக் அலி அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.மேலும் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் (பாபு) B.com.,DCA., மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சிராஜ் ஆகியோர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.


இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் K.முஹம்மது ரபீக்,விம் மாநில செயலாளர் மெஹராஜ் பானு, மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்.மஜீத்

கிழக்கு தொகுதி தலைவர் I. சபியுல்லா B.com,திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I.ஷேக் முகம்மது,மேற்கு தொகுதி செயலாளர் KSA. ரியாஸ்,கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் k. அப்துல் அஜீஸ் MSW.,M.Phil., LLB.,வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக் அலாவுதீன்,


SDTU மாவட்ட துணைத்தலைவர்  காஜா மொய்னுதீன்,விம் மாவட்ட தலைவர்  தவுலத் நிஷா, உள்ளிட்ட தொகுதி கிளை அணி நிர்வாகிகள் பொது மக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.இறுதியாக  மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments