// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி MIET பொறியியல் கல்லூரியில் 27-வது ஆண்டு விழா – விஜய் டிவி புகழ் KPY பாலா பங்கேற்பு

திருச்சி MIET பொறியியல் கல்லூரியில் 27-வது ஆண்டு விழா – விஜய் டிவி புகழ் KPY பாலா பங்கேற்பு

 திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள MIET பொறியியல் கல்லூரியின் 27 வது ஆண்டு விழா கல்லூரி அரங்கில் சிறப்பாக இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு MIET கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கி ஆண்டு விழாவில் தலைமை உரையாற்றினார்.பேராசிரியர்கள்  மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.

MIET பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். நவீன் சேட் கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்து மாணவர்கள் மத்தியில் உரை ஆற்றினார்.


மேலும் அனைத்து துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டும் கல்லூரியின் வருடாந்திர அறிக்கை, காணொளி வாயிலாக திரையிடப்பட்டது


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விஜய் டிவி புகழ் KPY.பாலா மற்றும் அவரது சிறப்பு குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. MIET கல்லூரி ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments