// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** வேளாளர் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு 20% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் - ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு வலியுறுத்தல்

வேளாளர் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு 20% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் - ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னரில், வருகிற ஜூலை மாதம் 13ஆம்தேதி சமுதாய மாநாடு நடைபெற உள்ளது.

இதனையொட்டி திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் நடைபெற்றது.



தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர்.செந்தில் பிள்ளை கூறுகையில்... அனைத்து உட்பிரிவு வேளாளர்களும் ஒருங்கிணைந்து இந்த மாநாட்டை நடத்த உள்ளதாகவும், 1871 மற்றும் 1931ல் வெள்ளாளர் என்ற ஒரேகுடையின்கீழ் அரசாணை வழங்கப்பட்டதுபோல, 

தற்போதும் வெள்ளாளர் என்ற ஒரே குடையின் கீழ் அரசாணை வழங்கப்படவேண்டும், அதேபோன்று வேளாளர் சமுதாயத்திற்கு என தனி நலவாரியம் அமைக்கப்படவேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைத்தனர்.

சமுதாய ஒற்றுமைக்கான இந்த மாநாட்டில் ஒரு லட்சம்பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவு அளிக்கப்படும் என்றும், மக்கள்தொகையை கணக்கில் கொண்டு 20% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டனர்.



Post a Comment

0 Comments